நீ எங்கே செல்கின்றாய்?...
என்
மூடிவிட்ட இமைக்கூண்டிற்குள்
உன்
நினைவுப் பறவைகள்
சிறகடித்துப் பறக்கின்றன.
என்
மனச்சிறைக்குள் அகப்பட்டாலும்
அவை
மவுனப்போராட்டம் நடத்துகின்றது.
மதில் சுவர்களாய்
என்
இமைக்கதவுகளை மூட நினைத்தாலும்
விழி வண்டுகள்
உன்னை நோக்கியே பறக்கின்றன.
கனவில் வரும்
உன்
நினைவுகளுக்குக் கூட
இத்தனை வல்லமையா?
என்னை
கவிதைகள் படைக்க தூண்டுகின்றதே!
உலகத்தையே
இருள்
சூழ்ந்துவிட்டதென்ற பிரேமையில்
நான் இருக்கும் போது
நீ மட்டும்
என்னுள் ஒளிப்பிரவாகம்
நடத்துவது ஏன்?
சமுதாயமே
வெறுத்துப்போன எனக்குள்
நீ வந்து
சாமரம் வீசுவதேன்?
இராகத்தையே
அறியாத என்னுள்
பூபாளத்தைப்
பாடத்தூண்டுவதேன்?
கண்களின்
யாகத்தை அறியாத எனக்கு
அதைக் கற்றுத்தந்தவள்
நீயல்லவா?
நானாக இல்லாத
என்னுள்
என்னைக் காட்டிவிட்டு
நீ
எங்கே செல்கின்றாய்?
காயத்திற்கு
மருந்தைக் கூறிவிட்டு
நீயே
காயத்தை
சுமந்து செல்வது நியாயமா?
நீ சென்ற பின்
மறந்து போக
உன் நினைவுகள்
தூறல் விட்டால் மறைந்து போகும்
வானவிற்கள் அல்ல.
உன்
நினைவுச் சுவடுகள்
எப்போதுமே அழியாத
வடுக்கள்.
கண்மணி
உன்
பாதச்சுவடுகளையாவது காட்டு
நானும் பயணிக்கிறேன்.
-----------------------------------------------------------------------------
02-02-1990-ல் கல்லுரியில் படிக்கும் போது எழுதியது.
-----------------------------------------------------------------------------
5 Comments:
நல்ல கவிதை
நன்றி ஆராதனா
புரம் பிறந்து
குளம் வளர்ந்து
மலை கழிந்து
இருப்பு கரை
குறையிலா வாழ்வு
வாழ்க பல்லாண்டு
கலக்கலான கவிதை கலை..வாழ்த்துக்கள்..
வாங்க கார்த்திகேயன், உங்களின் வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல...
Post a Comment
<< Home